தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மொட்டைகோபுரம் பகுதியில் தாளமுத்து நகர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், மாதவன் நாயர் காலனி சேர்ந்த ஆனந்த் (35), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சதீஷ் (19), செயின்ட் மேரீஸ் காலனியைச் சேர்ந்த விமல்ராஜ் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.