நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகத்தை வலுப்படுத்த தூத்துக்குடி மாநகராட்சியில் வாா்டு ஒன்றுக்கு 5 பகுதி சபா குழுக்கள் வீதம் 60 வாா்டுகளுக்கும் 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம், பிரையண்ட் நகர் 12 வது தெரு மத்திய பகுதியில் மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
45 வது வார்டு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களாக வழங்கினர்.
கூட்டத்தில், ரஜினி முருகன், கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், பெரியநாயகம், கட்சி நிர்வாகிகள் முத்து, சிம்புசிவா, நாகலிங்கதேவர், சுப்பிரமணிய கட்டபொம்மு, லட்சுமணன், கணேசன், முருகானந்தம், நல்லதம்பி, முத்துப்பாண்டி, சிவா, மாநகராட்சி அலுவலர்கள் முருகன், சீனிவாச கண்ணன், முத்து பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.