• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே மனைவி, தாயை தாக்கிய வாலிபர் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே குளத்தூர் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் - கற்பகம் தம்பதியரின் மகன் திவாகர் என்ற சின்ன ஊளி ( 26 ) உப்பள தொழிலாளியான இவர் சோனியா என்ற பெண்ணை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. 


இந்தநிலையில், சம்பவத்தன்று திவாகருக்கு குடிப்பழக்கம் உள்ளதால்  குடித்துவிட்டு வந்து மனைவி சோனியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். அதை திவாகரனின் தாயார் கற்பகம் மகனை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்தவர் தாயாரையும் தாக்கி சுவற்றில் தள்ளிவிட்டதில் தலையில் காயமடைந்து கற்பகம் மயக்கமடைந்தால், அங்கு வந்த கற்பகத்தின் மூத்த மகன் அருண்குமார் தாயாரை மீட்டு குளத்தூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.


பின்னர், சம்பவம் குறித்து கற்பகம் குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், எஸ்ஐ முத்துராஜா வழக்கு பதிவு செய்து திவாகரை கைது செய்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Share on

தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்ம நபர்!

தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு பகுதி சபா கூட்டம்!

  • Share on