தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி 3வது மைல், அரசு பாலிடெக்னிக் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லாத்து ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம ஆசாமி ஒருவர் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் சென்று கடப்பாரையால் உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.5000 பணத்தை திருடி சென்று விட்டாராம்.
இந்த சம்பவம் குறித்து, கோவில் தர்மகர்த்தா தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கோவில் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.