புளியம்பட்டி அந்தோணியார் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லையிலிருந்து புளியம்பட்டி ஒட்டப்பிடாரம் வழியாக சென்னைக்கு புதிய அரசு பேருந்து இயக்க வேண்டும் என சட்டமன்றத்தில் சண்முகையா எம்எல்ஏ வலியுறுத்தினார்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சன்முகையா பேசுகையில், "ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு பக்தர்கள் வந்து செல்லும் வகையில் நெல்லையிலிருந்து சீவலப்பேரி புளியம்பட்டி ஒட்டப்பிடாரம் வழியாக சென்னை வரை புதிய அரசு பேருந்து வசதியை அரசு ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசினார். மேலும் பஸ் சேவை குறித்த கோரிக்கையை தனியாக தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.