• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

  • Share on

கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த 5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாயமான நிலையில், இன்று காலை அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரச் சேர்ந்தவர் கார்த்திக் முருகன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி, இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் இங்குள்ள நகராட்சி பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் கருப்பசாமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.


நேற்று காலையில் பெற்றோர்கள் வழக்கம் போல வேலைக்கும், சகோதரன் பள்ளிக்கும் சென்றுவிட்ட நிலையில் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாராம்.


இந்த நிலையில், மதியம் வீட்டிற்கு வந்த பாலசுந்தரி வீட்டிலிருந்த மகனை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். டிவி மட்டும் ஓடிக்கொண்டிருந்துள்ளது. சிறுவன் கழுத்தில் 1.5 பவுன் செயினும் மற்றும் கையில் ஒரு கிராம் மோதிரம் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. பாலசுந்தரி உடனடியாக கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் விரைந்து வந்த நிலையில் தம்பதியினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. 


இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து சிறுவனை தேடியுள்ளனர். சிறுவன் கிடைக்கவில்லை.


இந்த நிலையில், இன்று காலை சிறுவன் கருப்பசாமியை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் கள்ளச்சாவி தயாரித்து 3 பவுன் நகை திருட்டு : எலக்ட்ரீஷன் கைது!

சட்டமன்றத்தில் சண்முகையா எம்எல்ஏ வைத்த கோரிக்கை... அமைச்சர் பதில்!

  • Share on