தூத்துக்குடியில் கள்ளச்சாவி தயாரித்து 3 பவுன் நகையை திருடிய எலக்ட்ரீஷனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சத்தியநாடார் தெரு, பிள்ளையார் கோவில் காம்பவுண்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் மனைவி சண்முக சுந்தரி ( 70 ). இவரது வீட்டிற்கு தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் ஆறாவது தெருவை சேர்ந்த எலக்ட்ரீஷன் பாலமுருகன் வேலைக்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வேலைக்கு வந்த நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து பீரோ சாவியை எடுத்துச் சென்று அதேபோல டூப்ளிகேட் சாவியை தயார் செய்துள்ளார்.
பின்னர், சண்முகசுந்தரி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது வீட்டுக்கு வந்த பாலமுருகன் டூப்ளிகேட் சாவி மூலம் வீடு மற்றும் பீரோவை திறந்து அதிலிருந்து 3 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி விளக்கை திருடிச் சென்றுள்ளார். இதன் மதிப்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இது குறித்து வடபாகம் போலீசில் சண்முகசுந்தரி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகனை கைது செய்தனர்.