• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் படுஜோராக நடைபெறுகிறதா தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை?

  • Share on

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாநகரில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டு பரவலாக பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் தினசரி வேலைக்கு சென்று கிடைக்கும் தங்களது ஊதியத்தின் பெரும் பகுதியை லாட்டரி சீட்டுக்கே செலவு செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. 


இதனால், பொருளாதார ரீதியாக அந்த குடும்பம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

தூத்துக்குடியில் கள்ளச்சாவி தயாரித்து 3 பவுன் நகை திருட்டு : எலக்ட்ரீஷன் கைது!

  • Share on