வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், வாகைக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, சேர்வைக்காரன் மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், விமான நிலையம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை, மறவன் மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிப்பட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.