காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தி யுள்ளார்.
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
விட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் கூடுதலாக வசிலிப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகை பணம் கொடுக்க முடியாமல் மிகவும் சிரமபட்டு வருகிறார்கள் .
இதனை கருத்தில் கொண்டு அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தரும் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி காயல்பட்டினத்தில் சொந்த வீடு இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது எனவும்,
காயல்பட்டினத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருக்கிறதா என்று உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமைப்பு செய்யபட்ட நிலங்களை அரசு கை பற்றி சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.