கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவு செய்த வழக்கில் கன்னியாகுமரி ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய அமலா ஜெசி ஜாக்குலின் மற்றும் அவரது கணவர் ராஜேஸ்வரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்த வழக்கில் குமரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளது.
நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அமலா ஜெசி ஜாக்குலின் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக கடந்த 01-12-1999 முதல் 31-03-2009 காலகட்டத்தில் பணியாற்றிய போது, 25,40,972 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், நேற்று (06-12-2024) தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் முதல் குற்றவாளியாக ஊராட்சி வளர்ச்சி துறையில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் அமலா ஜெசி ஜாக்குலினும், அவரது கணவர் ராஜேஸ்வரன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு இருந்தனர். அதில் இரண்டு பேருக்கும் தலா மூன்று வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளனர்.
அமலா ஜெசி ஜாக்குலின் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிட தக்கது.