தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை பரிசோதித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது வினியோகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக குளோரின் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, தான் வழங்கப்படுகிறது. ஆனால், குடிநீர் குழாயில் ஏற்படும் சேதம் உள்ளிட்ட காரணங்களால், குடிநீரில் கழிவு நீர் கலந்துடுகிறது. மழை காலம் என்பதாலும் குடிநீரின் தரம் குறித்து சில இடங்களில் பொதுமக்கள் தரப்பில் புகார் வருகின்றது.
45 வது வார்டு கட்டபொம்மன் நகர் மெயின் ரோடு ( படம் )
எனவே, தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்வதோடு, அங்கு குடிநீரின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் குடிநீரின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை அளிக்க குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.