• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களோடு வந்த பைக் பறிமுதல் : ஒருவர் கைது!

  • Share on

குறுக்குச்சாலை பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நபரை போலீசார கைது செய்தனர்.


தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மேற்பார்வையில், ஒட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் இன்று (06.12.2024) ஒட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குசாலை சண்முகபுரம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில், அதில் தூத்துக்குடி குளத்தூர் பகுதியை சேர்ந்த பெத்துப்பாண்டி மகன் பொன்னுதுரை (37) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் பொன்னுதுரையை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 3,432 மதிப்புள்ள 3 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கேட்டு 52 லட்சத்தை இழந்த தூத்துக்குடி தொழிலதிபர் : மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜக!

  • Share on