தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் திருஉருவச்சிலைக்கு, திமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் தலைசிறந்த சட்டமாமேதை. சமத்துவம், சமூக நீதி வெற்றிப்பெற போராடியவர். மக்களின் விடுதலைக்காக எந்த எல்லைக்கும் சென்று, அடக்குமுறைக்கு எதிராக தீர்க்கமாகக் குரலெழுப்பியவர். இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கு வடிவம் கொடுத்தவர். இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சர் எனப் பல்வேறு முகங்களில் இன்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார் பாபா சாகேப் அம்பேத்கர்.
இந்த மகத்தான ஆளுமையின் நினைவு தினமான இன்று, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் திருஉருவச்சிலைக்கு, திமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.