• vilasalnews@gmail.com

கோவில்பட்டியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் கைது!

  • Share on

கோவில்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அருள் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா மற்றும் போலீசார் நேற்று (04.12.2024) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி மேற்கு பூங்கா ரோட்டில் உள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கலியுகபெருமாள் மகன் கார்த்திக் (31) என்பதும் அவர்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் கார்த்திக் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்‌. மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

எப்போதுவென்றான் பகுதியில் சாலை விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

இன்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார்.... தூத்துக்குடியில் திமுக மரியாதை!

  • Share on