எப்போதுவென்றான் பகுதியில் நடந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நாதன் கிரி மகன் நித்துகிரி (27). இவர் தூத்துக்குடி மாவட்டம், எப்போதுவென்றான் பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து தான் தங்கி இருக்கும் இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலை ரோடு பசுவந்தனை விலக்கு அருகே செல்லும்போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.