அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்வதற்கு நிறுவன வளாகங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது தொடர்பாக சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் காணப்பட்ட 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டே பணிபுரியும் பணியாளர்கள் பணியிடையே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அமர்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர, 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் புதிய பிரிவு 22-A தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021 மூலம் சேர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசு அசாதாரண அரசிதழ் எண்.465, நாள்: 01.10.2021 மூலம் வெளியிடப்பட்டு 04.10.2021 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-A-ன் படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாளர்கள் அமர்வதற்கு நிறுவன வளாகங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 02.12.2024 மற்றும் 03.12.2024 ஆகிய நாட்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, முரண்பாடுகள் காணப்பட்ட 45 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.