கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு உடனே வருவது திருவண்ணாமலை தீபம் முதல் சபரிமலை ஐயப்பன் தான். ஆனால் இந்த கார்த்திகை மாதம் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த மாதமாகும் என்பது தெரியுமா? இந்த மாதத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் அவ்வளவு சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
கார்த்திகை மாதம் என்றால் மழை பொழியும் கார்மேகும் மாதமாகும். மேலும் சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதமாகவும் கார்த்திகை மாதம் இருந்து வருகிறது. கார்த்திகை மாதங்களில் பல விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் சகல செல்வமும் பெற்று வாழ்வில் நலமுடன் வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது.
தமிழ் மாதங்களில் 8 வது மாதமாக வரும் கார்த்திகை மாதம், பக்திக்குரிய மாதமாகவும், முக்தியை அடைவதற்கு வழிகாட்டும் புண்ணிய மாதமாகவும் கருதப்படுகிறது. இதனை பாகுலம் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. சூரிய பகவான், விருச்சிக ராசியில் பயணிக்க துவங்கும் மாதமே கார்த்திகை மாதமாகும். வாழ்க்கையை வளமாக்கக் கூடிய பல நல்ல பலன்களை தரக் கூடிய மாதம் கார்த்திகை மாதமாகும்.
இன்று கார்த்திக்கை 20, டிசம்பர் 5ஆம் தேதி வளர்பிறை சுபமூர்த்த தினமாகும். எனவே, தூத்துக்குடி சிவன் கோவில் என்று அழைக்கக்கூடிய அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஒரே நாளில் 23 திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருமண வீட்டாரின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.