• vilasalnews@gmail.com

நாடுகடந்த பிரச்சனை... தூத்துக்குடியில் ஒன்று திரண்ட இந்து அமைப்பினர் - நூற்றுக்கணக்கானோர் கைது!

  • Share on

இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.,  பாஜக,  விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுகின்றது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்ந்த பின், இந்துக்களுக்கு எதிராக வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது.


மேலும், இந்து அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளன. கிருஷ்ண தாசை கைது செய்தது மட்டுமின்றி அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. இதனால், வங்காளதேசம் தலைநகர் டாக்கா மற்றும் துறைமுக நகரமான சட்டோகிராம் உட்பட பல்வேறு இடங்களில் இந்துக்கள் போராட்டத்தில் குதித்தனர்.


இதனால், வங்காளதேசத்தின் வன்முறையானது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களுக்கு எதிரான வன்முறையை வங்காளதேச இடைக்கால அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என உலகம் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்து அமைப்பு தலைவர் கிருஷ்ண தாஸ் கைது, சிட்டகாங்கில் உள்ள காளி கோவில் உடைப்பு மற்றும் வங்காளதேசம் முழுவதும் இந்துக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் அதிருப்தி அளிப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கூறி உள்ளார்.


இதற்கிடையே வங்காளதேசத்தை புறக்கணிப்போம், பயங்கரவாத தாக்குதல் ஆகிய ஹேஷ்டேக்குகள் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகிவருகின்றது. இந்த ஹேஷ்டேக்குடன், வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை, இந்துக்கள் மீதான தாக்குதல்கள், இந்திய தேசியக் கொடி அவமதிப்பு போன்ற பல தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை  பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.


இந்த நிலையில், வங்கதேச இந்துக்களின் உரிமை மீட்கும் வகையிலான போராட்டம், தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ், பாஜக விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்புகளும் இணைந்த வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சார்பில் இன்று நடத்தப்பட்டது.


அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி டிவிடி சிக்னல் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காவல்துறை அனுமதி கொடுக்காததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி இளைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சொன்ன ஹேப்பி நியூஸ்!

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on