• vilasalnews@gmail.com

தூத்துக்குடி இளைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சொன்ன ஹேப்பி நியூஸ்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 14 பூங்காக்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு புதன்கிழைமைகளில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்  ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது. 


இம்முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 


பின்னர் மேயர் பேசியதாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இதுவரை நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 3052 மனுக்கள் பெறப்பட்டது 2500 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பில் உள்ள பூங்காக்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. தூத்துக்கு மாநகராட்சி பூங்காக்களில் கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மைதானம் போன்ற விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


ஆகவே, இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 பூங்காக்களில் முதல்கட்டமாக கூடைப்பந்து, கைப்பந்து, கபடி களம் உள்ளிட்ட விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பெரும்பாலான ரோடுகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் ஜனவரியில் தொடங்கும். வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரோடுகளும் புதிதாக போடப்படும் என்று மேயர் தெரிவித்தார். 

  • Share on

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : ஒருவர் கைது!

நாடுகடந்த பிரச்சனை... தூத்துக்குடியில் ஒன்று திரண்ட இந்து அமைப்பினர் - நூற்றுக்கணக்கானோர் கைது!

  • Share on