தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 1.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சார்பதிவாளர் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை, ஆய்வாளர் அனிதா மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்குள்ள அலுவலகங்களில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், சோதனை நடந்த நேரத்தில் அலுவலகப் பொறுப்பில் இருந்த தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் ஆரோக்கியராஜ் ( 54 ), அலுவலக உதவியாளர் முத்துமணி ( 59 ), தனியார் பத்திரபதிவு எழுத்தர் மாரியப்பன் ( 48 ) பத்திர எழுத்தர் அலுவலக ஊழியர் ஜோசப் செல்வராஜ் ( 45 ) ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.