தூத்துக்குடியில் நாளை ( டிச.,5 ) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை ( டிசம்பர் 5ம் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் கீழ்கண்டவாறு ஆகும்.
மாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், திரேஷ் நகர், ஹவுசிங் போர்டு, குமரன் நகர், காமராஜ் நகர், டேவிஸ் புரம், ஜாகிர் உசேன் நகர், சுனாமி நகர், நேரு காலனி கிழக்கு, லூர்தம்மாள்புரம், தாளமுத்து நகர், ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், மாதா நகர், சிலுவை பட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், அரசரடி, கீழ அரசரடி, தருவைகுளம் தளவாய்புரம், கோமஸ்புரம், பனையூர், ஆனந்த மாடன் பச்சேரி, மேல மருதூர், அ. குமாரபுரம், திரேஸ்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை செய்யப்படும்.