• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. மதுபோதையில் ஏற்பட்ட முன்பகை காரணமா?

  • Share on

தூத்துக்குடி அருகே மது அருந்தும் போது இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட முன் விரோதத்தால் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவரை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்த  அதே பகுதியில் இரும்புக்கடை நடத்திவரும் முருகேசன். இவரது மகன் வெள்ளக்கண்ணு ( 26 ). கொத்தனாராக உள்ளார். இந்த நிலையில், இன்று காலை வெள்ளக்கண்ணு தன் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.


இதில், வெள்ளக்கண்ணுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்து தடுக்க முயன்ற கற்குவேல் என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில், அவர் படுகாயம் அடைந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


அதில், போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட்டாம்புளி அருகிலுள்ள போடம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராஜேஷ், சதீஷ்குமார், பாண்டி, குமார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள குளத்துக் கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த வெள்ளக்கண்ணு மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடம் தகராறு செய்ததில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார்களாம்.


இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வெள்ளைக்கண்ணு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.  இந்த நிலையில் வெள்ளக்கண்ணு உள்பட கைதானோர் ஜாமீனில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வெள்ளக்கண்ணுவை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் கால்நடை வளர்ப்போர் கவனம்... மாநகராட்சி நடவடிக்கை!

தூத்துக்குடி விமான நிலையம் முன்பு பேருந்துகள் நின்று செல்லும் : அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

  • Share on