• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி கொலை!

  • Share on

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 


தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ராேட்டைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகன் வெள்ளகண்ணு (26). இவர் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அப்பகுதியில் சாலையில் நடந்த சென்றபோது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.


இதுகுறித்து, தகவல் அறிந்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகள் யார்? முன் பகை காரணமா? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில்...அண்ணாமலையுடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

தூத்துக்குடியில் கால்நடை வளர்ப்போர் கவனம்... மாநகராட்சி நடவடிக்கை!

  • Share on