தூத்துக்குடி அருகே பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டியதாக 2 பேரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ கீதா மற்றும் போலீசார் முத்தையாபுரம் வடக்கு தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த இரண்டு பேர் திரும்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் நிற்கச் சொன்னபோது ஆத்திரம் அடைந்த இருவரும் அரிவாளை காட்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, எஸ்எஸ்ஐ ராஜகீதா புகார் அளித்ததின் பேரில், அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சையா மகன் அஜித்குமார் ( 29 ) மற்றும் முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியில் சேர்ந்த சந்திரன் மகன் மகாராஜா ( 20 ) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.