• vilasalnews@gmail.com

கடைசி நேரத்தில் மாறிய முடிவுகள்... எட்டயபுரம் பந்தய களத்தை அதிரவிட்ட மெடிக்கல் விஜயகுமார் காளைகள்!

  • Share on

எட்டயபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தின் பெரிய மாடு, சின்னமாடு என அனைத்து பிரிவுகளிலும் சண்முகபுரம் மெடிக்கல் பி.விஜயகுமாரின் காளைகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.


தமிழர்களின் வீரத்திலும், உணர்ச்சியிலும் பிரிக்கமுடியாத பாரம்பரியம் மிக்க பந்தய விளையாட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம். இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயமானது தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.


இந்த பகுதிகளில் நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்கள், பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டிகைகள், சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்த நாள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் என பல்வேறு விழாக்களில் மாட்டு வண்டி எல்கை பந்தயங்கள் இல்லாமல் அவ்விழாக்கள் நிறைவு பெறாது.


இத்தகைய மிகச்சிறப்பு வாய்ந்த மாட்டு வண்டி எல்கை பந்தயமானது, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நகர முக்குலத்தோர் சங்கம் இளைஞர் அணி மற்றும் இராமனூத்து, ஈராச்சி, கசவன்குன்று, முதலிபட்டி, இளம்புவனம், தலைகாட்டுபுரம் சுற்றுவட்டார முக்குலத்தோர் இணைந்து நடந்தும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில் இன்று ( 1.12.24 )  நடைபெற்றது. இப்போட்டியானது பெரிய மாடு மற்றும் சின்ன மாடு 2 சுற்றுகள் என 3 பந்தயங்கள் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன.


பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு போக வர 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில்,  யாருக்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல, காளைகள் சீறிப் பாய, சாராதிகளும், பின் சாரதிகளும் காளைகளை வேகமெடுக்க ஓட்டிச்சென்றனர். சாலைகளின் இருபுறங்களிலும் பந்தய ரசிகர்களும், பார்வையாளர்களும் ஆரவாரமிட்டு, போட்டியாளர்களை உற்றாசகப்படுத்தினர்.


இதனால், களத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என எல்லை கோட்டை தொடும் இறுதி நிமிடம் வரை பந்தயமானது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை தொற்ற வைத்தது. இத்தகைய சூழலில் தான் தூத்துக்குடி வீரவிளையாட்டு கழக செயலாளரும், தமிழகத்தின் தலைசிறந்த பந்தய மாட்டின் உரிமையாளர்களில் ஒருவருமான தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் மெடிக்கல் பி.விஜயகுமாரின் காளைகள், பெரியமாடு, சின்ன மாடு 2 சுற்றுகள் என அனைத்திலும் முதல் பரிசை தட்டிச்சென்றது. அந்த மாட்டை களத்தில் சாரதி வெங்களூர் அங்குச்சாமி, மறவர்கரிசல்குளம் கருப்புத்துரை, பின்சாரதிகள் பச்சைதுண்டு பாலா, கட்டபொம்மன் ஆகியோர் திறமையாக ஓட்டினார்கள். அதே போல், இன்றைய தினம் மதுரை மாவட்டம் கிடாரிபட்டியில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்திலும் கலந்து கொண்ட மெடிக்கல் பி.விஜயகுமாரின் காளைகள் முதல் பரிசை தட்டிச்சென்றது. அந்த காளைகளை சாரதி மாரி, பின்சாரதி மருது ரமேஷ் திறமையாக ஓட்டினார்கள்.


எனவே, இன்றைய தினத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட மெடிக்கல் பி.விஜயகுமாரின் காளைகள் நான்கு முதல் பரிசைத் தட்டி தூக்கியது, அவரது ரசிகர் பட்டாளங்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. இதனால் வெற்றி விருந்தை ருசித்து, பட்டாச போட்டு மத்தாளத்த கூட்டு என ஹேப்பி மூடில் இருக்கின்றனர் மெடிக்கல் ரசிகர்கள்.

  • Share on

எட்டயபுரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம் - இறுதியில் கடும் போட்டிகளுக்கு நடுவே வென்ற காளைகள் எது தெரியுமா?

தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவிற்கு நேர்ந்த கதி... ஜெயலலிதாவிடம் தனி கவனம் பெற்றவருக்கா இந்த நிலை!

  • Share on