எட்டயபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் நகர முக்குலத்தோர் சங்கம் இளைஞர் அணி மற்றும் இராமனூத்து, ஈராச்சி, கசவன்குன்று, முதலிபட்டி, இளம்புவனம், தலைகாட்டுபுரம் சுற்றுவட்டார முக்குலத்தோர் இணைந்து நடந்தும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, எட்டயபுரம் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
எட்டயபுரம் - விளாத்திகுளம் சாலையில் நடைபெற்ற இப்போட்டியானது பெரிய மாடு மற்றும் சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு போக வர 8 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது.
இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் முதலிடம் பிடித்து ரூ.1 லட்சத்து 117 பரிசாக பெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் எம்.கண்ணன் வேலங்குளம் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 75,117 ரூபாய் பரிசாக பெற்றது. 3-வது இடம் பிடித்த கே.வேப்பங்குளம் நல்லம்மாள் நினைவாக நல்லுத்தேவர், அதிகரை வேங்கை சேர்வை, மலைச்சாமி கோனார் நினைவாக அயிலாங்குடி வண்டிக்கு 50,117 ரூபாயும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார், ஆர்.ஸ்.சுரேஷ்குமார் ஐயங்கார் பேக்கரி, துரைச்சாமிபுரம் மாட்டு வண்டிக்கு ரூ.10 ஆயிரம் 117 பரிசாக வழங்கப்பட்டது.