தருவைகுளத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தருவைகுளம் கிராமத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளியில் நடந்தது. ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வழிமுறைகளை பார்வையிட்டார் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் எம்எல்ஏ வழங்கினார்.
சிறப்பு மருத்துவர்கள் ஐஸ்வர்யா, ரேவதி, சரிதா, நிவேதா, நாகராஜன் ஆகியோர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் தருவைக்குளம் சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த், மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் மதுரம்பிரைட்டன், ஒட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமாலதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் பெரியசாமி, ஆழ்வார், பாபு, பங்குத்தந்தை வின்சென்ட், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், காடோடி உட்பட சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.