தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சிவகாசி SBJ ஹெல்த் சென்டர் இணைந்து நடத்தும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை இன்று (14.2.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் SBJ ஹெல்த் சென்டர் சார்பாக காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளாத்திகுளம் குளத்தூர் இந்து நாடார் நடுநிலை பள்ளியில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண்புரை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (14.02.2021) நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும் போது, நமது உடலின் முக்கியமான உறுப்பு கண் ஆகும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். கிராமத்தில் உள்ள முதியோர்களுக்கு கண்புரை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. அதனால் கிராமப்புற முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இவ்வாறு நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் கண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை SBJ ஹெல்த் சென்டரின் நிர்வாக இயக்குனர் சண்முகராஜன், மருத்துவர் ஜெயசுதா, குளத்தூர் இந்து நாடார் நடுநிலைபள்ளி தாளாளர் பெத்து மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த முகாமில் குளத்தூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை தலைமை மருத்துவர் வடிவேல் முருகன், டி.எம்.எம் கல்லூரி மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி, விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், குளத்துர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 80 பேர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.