• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப  நாய்கள் கொண்டு தீவிர சோதனை ஈடுபட்டனர். 


தூத்துக்குடி விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னையில் உள்ள விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து மோப்ப  நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 


அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இது வதந்தி என தெரியவந்தது. இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி - சென்னை விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. ஆனால், பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் வழக்கம் போல் இன்று பிற்பகல் புறப்பட்டு சென்றது. அதில் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இரத்ததான முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

தருவைகுளத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் : சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on