• vilasalnews@gmail.com

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இரத்ததான முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

  • Share on

தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை  முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி, கண்ணன், பழனிகுமார், நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சி.என். அண்ணாதுரை, வைதேகி, ஸ்ரீதர், அருணா, ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இரத்ததான முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • Share on