• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் எங்கே?

  • Share on

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். 


இந்தநிலையில், கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப இவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மேலும் இவர்கள் எந்த பகுதியில் இருக்கிறார்கள் எனவும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஆகவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர். 


அதைத் தொடர்ந்து, இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சி... அலைபாயுதே திரைப்பட பாணியில் பிளஸ் 1 மாணவர்கள் திருமணம்!

தூத்துக்குடியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!

  • Share on