• vilasalnews@gmail.com

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் : தூத்துக்குடியில் நாளை (நவ.,30) நடக்கிறது!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடியில் நாளை (நவ.,30) நடைபெற இருக்கிறது.


இது குறித்து அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைக் கழகம், வார்டு, வட்டக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கள ஆய்வுக் கூட்டம் நாளை ( நவம்பர் 30 ) சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தூத்துக்குடி மணிநகர் கைலாஷ் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது. அதிமுக துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் செம்மலை ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசுகின்றனர்.


கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர், மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூராட்சி பகுதி அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், மகளிர் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்

  • Share on

வாழை பட நட்சத்திரத்தை தட்டிதூக்கிய தூத்துக்குடி தவெக!

தூத்துக்குடியில் நாளை ( நவ.,30 ) மின்தடை ஏற்படும் இடங்கள்!

  • Share on