• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பட்டப்பகலில் அசால்டாக தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்...எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

  • Share on

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீட்டிற்கு  விநியோகம் செய்வதற்காக வந்த  வாகனத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று ( 27.11.24 ) பகலில் தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் சார்பில் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்காக சிலிண்டர் கொண்டு வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சிலிண்டர் டெலிவரி செய்ய உள்ளே சென்றுள்ளனர்.


அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சமையல் எரிவாயு இருந்த வாகனத்தில் ஊழியர் இல்லாததை தெரிந்து கொண்டு, சரக்கு வாகனத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 வருடம் சிறை - தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடியில் தொடரும் செல்போன் பறிப்பு சம்பவங்கள்!

  • Share on