மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த முறையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியானவர்களிம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் - ஆய்வக நுட்புநர் நிலை III
காலிப்பணியிடங்கள் - 1
பணியிடம் - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஸ்ரீராம் நகர், கோவில்பட்டி சுகாதார மாவட்டம்.
பதவியின் பெயர் - இடைநிலை சுகாதாரப் பணியாளர் ((Midlevel Healthcare Provider)
காலிப்பணியிடங்கள் - 3
பணியிடம் :
1.துணை சுகாதார நிலையம், அமலி நகர், தூத்துக்குடி சுகாதார மாவட்டம்.
2.துணை சுகாதார நிலையம், அப்பனேரி, கோவில்பட்டி சுகாதார மாவட்டம்.
3.துணை சுகாதார நிலையம், காட்டுநாயக்கன்பட்டி, கோவில்பட்டி சுகாதார மாவட்டம்.
பதவியின் பெயர் - பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை - II)
காலிப்பணியிடங்கள் - 1
பணியிடம் - நகர்புற நல வாழ்வு மையம் முத்தையாபுரம்
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு 01.07.2024 தேதியின்படி, ஆய்வக நுட்புநர் நிலை III பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியான வயது வரம்பு கிடையாது. ஒசி பிரிவினருக்கு மட்டும் 32 முதல் 50 வயதை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
பல்நோக்கு சுகாதார பணியாயர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி
ஆய்வக நுட்புநர் நிலை பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மருத்துவம் ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 ஆண்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி, நல்ல கண் பார்வை தேவை.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு செலிவியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டப்படி இருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு உயிரியியல் அல்லது தாவரவியியல் மர்றும் விலங்கியியல் உள்ளிட்ட பாடங்கள் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்பரவு ஆய்வாளர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
ஆய்வக நுட்புநர் நிலை பதவிக்கு ரூ.13,000 மாதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
இடைநிலை சுகாதாரப் பணியாளர் பதவிக்கு ரூ.18,000 மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாயர் பதவிக்கு ரூ.14,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக நிரப்படுவதால் விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணி நியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அலுவலத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி 628002.
விண்ணப்பிக்க கடைசி நாள்
03.12.2024 மாலை 5 மணி வரை
நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.