தூத்துக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1,60,300 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பத்திர பதிவு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பீட்டர் பால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1,60,300 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.