தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு பகுதிக்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் பேச்சிராஜ் முன்னிலையில் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது.
மேயரிடம் கொடுக்க பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :-
1. தூத்துக்குடி, பிரையண்ட் நகர் பகுதியான 12, மேற்கு 45 வது வார்டு, கட்டபொம்மன் நகர், நான்கு முனை சந்திப்பில் இரவு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என பல்வேறு வாகன போக்குவரத்து இருப்பதால் இரவு நேரங்களில் பொது மக்கள் சாலையை கடப்பதற்கு போதிய மின் விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொது மக்கள் நலன் கருதி முக்கியமான கோரிக்கையான உயர்மின் கோபுர விளக்கு வசதியை கட்டபொம்மன் நகர், 12 வது தெரு மேற்கு, நான்கு முனை சந்திப்பில் அமைத்து தரும்படியும்,
2.மழை காலம் நெருங்குவதால் கட்டபொம்மன் நகர், 12 வது தெரு மேற்கு மழைநீர் வடிகால் பணியை சீரமைத்து தரும்படியும்,
3 பிரையண்ட் நகர் 11 வது தெரு மெயின் ரோடு மற்றும் 9 வது தெருவில் புதிய தார் சாலையில் நல்ல தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் அந்த உடைப்பை சரிசெய்து தரும்படியும், பொதுமக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, 59 வது வார்டு வட்ட செயலாளர் பெருமாள் சாமி, தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.