• vilasalnews@gmail.com

எட்டப்ப நாயக்கருக்கு சிலை...எட்டயபுரம் அரண்மனையை அரசுடைமையாக்கி சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை!

  • Share on

எட்டயபுரம் அரண்மனையை புதுப்பித்து அரசுடைமையாக்கி  சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் தினேஷ் ரோடி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவும் எட்டயபுரம் இருந்தது.


மகாகவி பாரதியாருக்கு "பாரதி" என்று பட்டம் கொடுக்கப்பட்டது எட்டப்ப நாயக்கர்களால் தான். தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான அரண்மனையாக எட்டயபுரம் அரண்மனை திகழ்ந்து வருகிறது. ஆனால், தற்போது எந்தவொரு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் பாழடைந்து காணப்படுகிறது.


ஆகவே, தமிழ்நாடு மாநில அரசு எட்டயபுரம் அரண்மனையை அரசுடைமையாக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மேலும் சமீபத்தில் இடிக்கப்பட்ட திவான் பங்களாவை மீண்டும் புதுப்பித்து சுற்றுலா பார்வையிடமாக அறிவித்து மக்களின் பார்வைக்காக அனுமதிக்க வேண்டும்.


எட்டப்ப நாயக்கருக்கு ஒரு வெண்கலச்சிலை அமைத்து மன்னருடைய பொற்கால ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் அவருடைய வரலாற்று சிறப்புகளை காட்சிப்படுத்த மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

  • Share on

கோடிகளில் குவிந்த திருச்செந்தூா் கோவில் உண்டியல் வருவாய்!

கட்டபொம்மன் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகர மதிமுக சார்பில் கோரிக்கை மனு!

  • Share on