• vilasalnews@gmail.com

கோடிகளில் குவிந்த திருச்செந்தூா் கோவில் உண்டியல் வருவாய்!

  • Share on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் வருவாயாக ரூ.4.07 கோடி, மற்றும் 1.9 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதம் 26, 27 ஆகிய இரு நாள்கள் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில், சிவகாசி பதினெண் சித்தா் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவார பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.


இதில், ரொக்கமாக ரூ.4 கோடியே 7 லட்சத்து 32 ஆயிரத்து 912, ஒரு கிலோ 908 கிராம் தங்கம், 21 கிலோ 100 கிராம் வெள்ளி, 26 கிலோ 100 கிராம் பித்தளை, 1.5 கிலோ செம்பு, 6 கிலோ 300 கிராம் தகரம் மற்றும் 1,234 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.


கோவில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியைப் பாா்வையிட்டனா். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், நாகவேல், கண்காணிப்பாளா் ராஜாகுமாா், ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

  • Share on

மேலே தேங்காய் ஆனால் உள்ளே... விடாது துரத்தி பிடித்த கயத்தாறு வட்டாட்சியர் சுந்தரராகவன் குழு!

எட்டப்ப நாயக்கருக்கு சிலை...எட்டயபுரம் அரண்மனையை அரசுடைமையாக்கி சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை!

  • Share on