தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 63 வாகனங்களுக்கு வரும் 30.11.2024ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 58 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 63 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30.11.2024 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் நாளை முதல் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய் 1000 (ஆயிரம் மட்டும்) முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் : 7598323680-ல் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.