50 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த தலைமுறைக்கான அடித்தளமாக, 2026 தேர்தல் அரசியல் களம் பார்க்கப்படும் நிலையில், திமுகவின் 4 வது தலைமுறை தலைவராவதற்காக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார் உதயநிதி என்று திமுகவினர் கொண்டாடிவரும் வேளையில், இன்று அவரின் பிறந்தநாளையும் தமிழகம் முழுவதும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம், பேரூராட்சி பகுதியில், தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு,
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தெற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின் படி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பார்த்திபன் முன்னிலையில் நகர செயலாளர் ஏ.கே.கோபிநாத் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில், பொதுமக்கள், கட்சிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.