• vilasalnews@gmail.com

அடேங்கப்பா... தூத்துக்குடி ஏர்போர்ட்டா இது!

  • Share on

தமிழகத்தில் நான்கு வழிப்பாதைகளையும் கொண்ட ஓரே மாவட்டம் தூத்துக்குடி தான். வான்வழி, தரைவழி, ரயில் வழி, கப்பல் வழியென நான்கு தடங்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக தூத்துக்குடி திகழ்கிறது.


தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புதிய விமான நிலையம் அதிநவீன வசதிகளை கொண்டு  சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த விமான நிலையமானது நான்கு நட்சத்திர அம்சங்கள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த புதிய விமான முனையத்தில் நவீன விமான கட்டுப்பாட்டு அறை மற்றும் விமான முனையம் முழுவதும் குளிரூட்டப்பட்டிருக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் இதனை அமைக்க திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கான செக்கின் கவுண்ட்டர்கள் மட்டும் 21 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியாக நான்கு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், விமானம் வந்து தரையிறங்கி பயணிகள் செல்வதற்கு மூன்று ஏரோ பிரிட்ஜ்கள் மற்றும் பயணிகளின் உடமைகளை எடுக்க 2 கன்வேயர் பெல்ட்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிறகு 5 விமானங்கள் வரை தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பயணிகளின் வசதிக்காக வாகனம் நிறுத்தும் இடமும் விசாலமாக அமைக்கப்பட்டு வருகிறது.


இந்த புதிய முனையத்தில் சுமார் 1440 பயணிகளுக்கான இருக்கை மற்றும் இரண்டு விஐபி ஒய்வு அறைகளும் பிரத்யேகமாக அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக புதிய முனையம் முழுவதும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் அமைக்கும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார தேவையை எளிதில் பூர்த்தி செய்யலாம்.


தற்போது இந்த விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 92 சதவீத பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் ஏற்கனவே அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என கூறப்பட்ட நிலையில், மீதமுள்ள பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ஓடுபாதை விரிவாக்கத்தை பொறுத்தவரையில் 93 சதவீத பணிகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது.


சென்னை விமான நிலைய ஓடுதளத்தின் நீளம் 3611 மீட்டர். அதற்கு அடுத்தப்படியாக 3115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட இரண்டாவது பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக தூதுக்குடி அமைகிறது. இதன் மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் பயன்பெறுவர் என சொல்லப்படுகிறது.


தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும் துாத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் 250 பேர் பயணிக்கும் ஏ- 321 ரக ஏர் பஸ் விமானம் வந்து செல்ல வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த விமான நிலையத்தின் புதிய முனையத்தின் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த புதிய முனையத்தின் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Share on

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் தூத்துக்குடி எம்பி கனிமொழி திடீர் சந்திப்பு!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அசத்திய ஆழ்வார்திருநகரி பேரூர் கழக திமுக!

  • Share on