தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திமுக தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் தூத்துக்குடி நகர கிளை சார்பில், தூத்துக்குடி மண்டல அலுவலகம் மற்றும் நகர பணிமனை முன்பு தொமுச மற்றும் திமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தொமுச செயலாளர் லிங்குசாமி, தலைமையில், பொருளாளர் முருகன், துணை பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், துணை தலைவர் கருப்பசாமி, சந்திரபோஸ், மரியதாஸ், ராமசாமி, வேலாயுதம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். தொமுச மாநில செயலாளர் தர்மன் சங்க கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொமுச உறுப்பினர்கள் முருகன், பிரேம்குமார், ராஜா, செண்பகராஜ், ஜீவானந்தம், மாடசாமி, சுதாகர், சரவணப் பெருமாள், வேல்முருகன், பெருமாள், ரமேஷ், சுந்தர், சண்முகராஜ், சின்னத்துரை, படையப்பா, ஜஸ்வந்த், சரவணக்குமார், அருணாச்சலம், இளங்கோ, முத்தையா, கனகராஜ், பொம்மு துரை, பரமசிவன், எஸ்.பரமசிவன், ராஜேந்திரன், மணி, சொரிமுத்து, சிவபாலன், சேது, உட்பட பலர் கலந்து கொண்டனர்.