தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு 48 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், கனகராஜ், வைதேகி, சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.