• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலி... குளங்கள், தடுப்பணைகளில் எஸ்பி ஆய்வு!

  • Share on

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு  குளங்கள், தடுப்பணைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  உத்தரவுப்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து இன்று (26.11.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளான, கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு  குளங்கள், தடுப்பணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  நேரில் சென்று பார்வையிட்டு குளத்தின் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து, குளத்தின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, காவல்துறையினருக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

  • Share on

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் களம் இறங்கிய என்சிசி மாணவிகள் படை!

தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • Share on