2024ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அறிய தொண்டாற்றி வருகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
2024-2025 ஆம் நிதியாண்டில் டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருதுத்தொகையும், 8 கிராம் தங்கப்பதக்கமும் இதர செலவினங்களுக்கு ரூ.80,000 (ரூபாய் எண்பதாயிரம் மட்டும்) சேர்த்து ஆக மொத்தம்.ரூ. 5,80,000வழங்கப்படுகிறது.
மேற்படி விருது பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையினை உயர்த்துவதற்கு முயற்சி மேற்கொண்டவராகவும் தாழ்த்தபட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகிய விவரங்கள் அதற்குரிய ஆதராங்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்திலுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் வருகின்ற 28.11.2024-க்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இவ்விருதினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட இனத்தவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.