தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது பணிகளைபுறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலம், பணியிடங்களை பாதுகாத்திட, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தூத்துக்குடி தாலூகா அலுவலகத்தில் வட்ட கிளை தலைவர் குமரன் தலைமையில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடியது. பல தாலுகா அலுவலகங்கள் மூடப்பட்டது. இதனால் வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கிது.