• vilasalnews@gmail.com

ஏரல் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் குத்திக்கொலை : வாலிபர் வெறிச்செயல்...போலீஸ் விசாரணை!

  • Share on

ஏரல் அருகே வீடுபுகுந்து, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (36). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் தேவிகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 


தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் அந்த வாலிபர் தனது  ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜா (24) என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகையா எம்எல்ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடியில் நாளை ( நவ.,26 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

  • Share on