ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்தும், மருத்துவமனையில் இருப்பு உள்ள மருந்துகள் குறித்தும் பொதுமக்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கோகுல், டாக்டர் ராஜஸ்ரீ , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் பெரியசாமி, செவிலியர்கள் யூஜின், சுகன்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.