தூத்துக்குடியில் கப்பல் ஊழியர் வீட்டில் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் தினேஷ் (34). இவரது மனைவி அஞ்சலி. தினேஷ் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். தற்போது மாத விடுமுறையில் சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இவர் கடந்த 8ந் தேதி அன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
இந்நிலையில், வீட்டில் எலக்ட்ரிசியன் வேலை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு வந்த ஊழியர் வீடு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் தினேஷிடம் கூறியிள்ளார். உடனடியாக மதுரையிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த பின்னர், 30 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி, 25 ஆயிரம் பணம் திருடி சென்றதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் வீட்டினுள் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து உள்ளனர். உடனடியாக தினேஷ் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, வடபாகம் காவல்துறை ஆய்வாளர் அருள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.